கோவில்மேடு டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மக்கள் போராட்டம்!

கோவை: கோவில்மேடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக அகற்றக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை தடாகம் சாலை கோவில்மேடு பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளுக்கு வந்து செல்பவர்களால் சாலையில் நடமாட முடியாத நிலை இருப்பதாகவும், கடைகளை மூட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Advertisement

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அந்த பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் பேருந்து நிறுத்தம், மருத்துவமனை, பள்ளி ஆகியவற்றுக்கு அருகில் உள்ளதாகவும், தினமும் இங்கு மதுபோதையில் வரும் சிலர் தகராறு செய்வதும், சாலையில் விழுந்து கிடப்பதும் தொடர்வதாக தெரிவித்தனர்.

இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடமாடவே அச்சத்தில் உள்ளதாகவும், இப்பகுதியில் பல்வேறு கோயில்களும் உள்ள நிலையில் பெரியவர்கள் கூட நடந்து செல்ல அச்சப்பட வேண்டிய சூழல் நீடிப்பதாகவும் கூறினர்.

எனவே, தமிழக அரசு தற்போது மூடவுள்ளதாக அறிவித்துள்ள 717 டாஸ்மாக் கடைகளில் இந்த இரண்டு கடைகளையும் சேர்த்து உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Advertisement

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கணவர் மீது புகார் அளிப்பேன்- சூலூர் சிறுமியின் தாய் ஆவேசம்…

கோவை: சூலூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தந்தை மீது புகார் அளிப்பேன் என்று தாயார் தெரிவித்துள்ளார். கோவை சூலூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் தாயார் போத்தனூர் பகுதியில்...

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.