ஒரு பெண் அதிகாரத்திற்கு வந்தால் மக்களுக்கு பிடிக்காதா? கனிமொழி எம்எல்ஏ ஆதங்கம்!

கோவை: என் மீது என்ன கோபம்? ஒரு பெண் அதிகாரத்திற்கு வந்தால் மக்களுக்குப் பிடிக்காதா என்று பேசி, தவெக கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி, அரசு அதிகாரிகளை தனது வீட்டிற்கே வரவழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்திய விவகாரம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், இது தனது அலுவலகம்தான் என்றும், பெண் அதிகாரத்திற்கு வந்தால் பிடிக்காதா என்றும் கூறி அவர் தற்போது அதற்கான விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் தவெகவைச் சேர்ந்த கனிமொழி. இவர் நேற்று அரசு அதிகாரிகளை தனது வீட்டிற்கு அழைத்து ஆலோசனை நடத்தியதுடன், அந்த புகைப்படங்களை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

Advertisement

இந்நிலையில், அரசு அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை நடத்தியதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதற்காக தவெகவைச் சேர்ந்தவர்களே தங்களது எம்எல்ஏவான கனிமொழியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

விமர்சனங்கள் அதிகரித்ததை தொடர்ந்து, கனிமொழி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இது தனது வீடு அல்ல என்றும், அலுவலகம் மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோ காட்சிகளில், “என் மீது மக்களுக்கு என்ன கோபம்? ஒரு பெண் அதிகாரத்திற்கு வந்தால் பிடிக்காதா?” என்று அவர் பேசியுள்ளார்.

Advertisement

தற்போது அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கணவர் மீது புகார் அளிப்பேன்- சூலூர் சிறுமியின் தாய் ஆவேசம்…

கோவை: சூலூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தந்தை மீது புகார் அளிப்பேன் என்று தாயார் தெரிவித்துள்ளார். கோவை சூலூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் தாயார் போத்தனூர் பகுதியில்...

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.