கோவை: கவுண்டம்பாளையம் சட்டமன்ற அலுவலகத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
2026 சட்டமன்ற தேர்தலை அடுத்து தமிழகம் முழுவதும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் புதுப்பிக்கபட்டு திறக்கபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புதுப்பிக்கபட்டு திறக்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ சட்டமன்ற உறுப்பினர் நாற்காலியில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

சட்டமன்ற அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களாக ஏற்றுக் கொண்ட பெரியார், பேரறிஞர் அண்ணா, அம்பேத்கர், அஞ்சலையம்மாள், வேலு நாச்சியார் ஆகிய ஐந்து பேரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.


