உரவிலை உயர்வு- கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்- தவெக அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பில் அதிருப்தி…

கோவை: மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

உரவிலை உயர்வை கண்டித்தும், மாநில அரசு உதவி தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போலவே பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

தற்போது நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர்கள் விலை உயர்ந்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் மத்திய அரசு விவசாய உரங்களின் விலையை உயர்த்தி உள்ளது மேலும் சுமையை தருவதாக பல்வேறு விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைகளில் உரங்களை ஏந்தியபடி மத்திய அரசு உரவிலை உயர்வை திருப்பி பெற வேண்டுமென வலியுறுத்தினர்.

அதே சமயம் மாநில அரசு ஆட்சிக்கு சிறு விவசாயிகள் வேளாண் கூட்டுறவில் வாங்கிய 50,000 கடன் தள்ளுபடி செய்துள்ள நிலையில் தவெக அரசு தேர்தல் வாக்குறுதியின் போதும் பிரச்சாரத்தின் போதும் 5 ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறிய நிலையில் அவ்வாறு செயல்படாமல் வெறும் 50,000 என்று குறிப்பிட்டு கடன் தள்ளுபடி செய்துள்ளது ஏமாற்றத்தை அளிப்பதாகவும், விவசாய கடன்கள் தள்ளுபடியில் கூட விவசாயிகளை தரம் பிரிப்பதாக சாடினர்.

Advertisement

எனவே முதலமைச்சர் விஜய் இந்த கடன் தள்ளுபடியை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.