கோவையில் பேருந்து நிலையம், பார்சல் குடோன்களில் திடீர் சோதனை…

கோவை: கோவையில் உள்ள பேருந்து நிலையங்கள் பார்சல் குடோன்களில் மோப்ப நாய் உதவுடன் போலிசார் சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

கோவை மாநகர பேருந்து நிலையங்கள், பார்சல் அலுவலக குடோன்களில் போலிசார் மோப்ப நாய்களுடன் போதை பொருட்கள் தொடர்பாக சோதனை மேற்கொண்டனர்.

போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் போலிசார் தீவிர சோதனை மேற்கொண்டு புகையிலை, கஞ்சா போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் போதையில்லா தமிழகம் போதையில்லா கோவை என்பதை மையமாக கொண்டு அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Advertisement

இந்நிலையில் இன்று காலை கோவை மாநகரில் உள்ள பேருந்து நிலையங்கள், பார்சல் குடோன்களில் போலிசார் மோப்ப நாய்கள் உதவியுடன் போதை பொருட்கள் தடுப்பு குறித்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பேருந்து நிலையங்களில் உள்ள கடைகள் பேருந்தில் பொருட்கள் வைக்கும் இடம் குடோன்களின் உள்ள மூட்டைகள் அட்டைபெட்டிகள் என அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது இனிவரும் நாட்களிலும் இதுபோன்று தொடர்ந்து திடீர் ஆய்வுகள் மேற்கொள்வும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவைக்கு பெருமை சேர்த்த ஐஐடி மாணவர்; Google AI போட்டியில் உலகளவில் வெற்றி

கூகுள் டீப்மைண்ட் உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி போட்டியில் கோவையைச் சேர்ந்த ஐஐடி சென்னை மாணவர் அர்ஜுன் திலக் ரூ.24 லட்சம் பரிசை வென்று சாதனை படைத்தார். அவரது வெற்றியை அமைச்சர் சம்பத் குமார் நேரில் பாராட்டினார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...