ஆன்லைன் சூதாட்டக் கடன் சுமையால் வாலிபர் மாயம்; போலீசார் தீவிர தேடல்

கோவை: கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வசித்து வந்த வாலிபர் ஒருவர், ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடன் சுமையால் மனவேதனையில் இருந்து மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பொம்மலூர் அருகே உள்ள செங்கன்பசுவந்தலவு பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (31), தனது மனைவி மீனா மற்றும் குடும்பத்தினருடன் கோவை சின்னியம்பாளையம் ஆர்.எஸ்.நகர் பகுதியில் வசித்து வந்தார். அவர் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆன்லைன் கேம்களில் ஈடுபட்டு வந்த அண்ணாதுரை, நாளடைவில் அதற்கு அடிமையாகியதாக தெரிகிறது. இதனால் பலரிடம் கடன் வாங்கி விளையாடிய அவர், சுமார் ரூ.20 லட்சம் வரை கடன் சுமையில் சிக்கியிருந்ததாக கூறப்படுகிறது.

கடன் பிரச்சினையால் மனஉளைச்சலில் இருந்த அண்ணாதுரை, நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் மீண்டும் திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

Advertisement

இதற்கிடையில், தனது அண்ணன் சரவணனுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய தகவலில், “ஆன்லைன் கேம் காரணமாக ரூ.20 லட்சம் கடனில் சிக்கியுள்ளேன். வாழ்க்கையே வீணாகிவிட்டது போல் உணர்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்” என்று குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தனது செல்போனையும் அணைத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி மீனா, பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான அண்ணாதுரையை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்ட பழக்கத்தால் கடன் சுமையில் சிக்கி வாலிபர் மாயமான இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் பாஜகவை தாக்கிய செங்கோட்டையன்!

தமிழகத்தில் சினிமா பிம்பம் குறித்து பாஜக விமர்சனம் செய்த நிலையில், ஆந்திர துணை முதலமைச்சர் குறித்த கேள்வியை எழுப்பி அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்தார்.

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.