கோவை: பல்வேறு கோரிக்கைகளில் வலியுறுத்தி கோவை மாவட்ட EPF பென்சனர்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சப்படி, உயர் சம்பளத்திற்கான பென்சன், ரயிலில் சலுகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் EPF பென்சனர்கள் தொடர் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. EPF 95 பென்சனர்களுக்கு குறைந்தபட்ச பென்சனாக ஒன்பதாயிரம் ரூபாய் பஞ்சபடியுடன் வழங்க வேண்டும், இடைக்காலமாக 2013ம் ஆண்டில் அமைக்கப்பட்ட பகத்சிங் கோசரியா MP தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி பரிந்துரை ரூபாய் 3000 பஞ்சபடியுடன் வழங்க வேண்டும், தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை பங்கு மார்க்கெட் சூதாட்டத்தில் முதலீடு செய்வதை தடுக்க வேண்டும்
2014ம் ஆண்டுக்கு முன்/பின் என்ன பாகுபாடு இல்லாமல் தகுதியுள்ள அனைவருக்கும் முழு சம்பளத்திற்கான உயர் பென்சன் வழங்கிட வேண்டும் , மூத்த குடிமக்களுக்கு பறிக்கப்பட்ட ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்கிட வேண்டும், ESI மருத்துவ வசதியை அனைத்து பென்சனர்களுக்கும் வழங்கிட வேண்டும் இன்று மத்திய அரசை வலியுறுத்தியும் மிகக் குறைந்த பென்சன் வாங்கும் EPF பென்ஷனர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தில் மாதம்தோறும் 2000 ரூபாய் வழங்க வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கோவையில் மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மத்திய மாநில அரசுகள் உடனடியாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்திய அவர்கள் இனிமேலும் காலம் தாழ்த்தக்கூடாது என்றும் இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.


