கல்லூரி மாணவரை இரும்பு ராடால் தாக்கி செயின் பறிப்பு- 5 பேருக்கு வலை

கோவை: கோவையில் கல்லூரி மாணவரை தாக்கி 2 பவுன் தங்கச் செயினை பறித்ததுடன், அறையில் அடைத்து வைத்து ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை சேர்ந்த கேசவன் (19), கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் குனியமுத்தூர் இ.பி. காலனியில் நண்பருடன் வாடகை அறையில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

Advertisement

சம்பவத்தன்று வெளியே சென்று விட்டு அறைக்கு திரும்பிய கேசவன், தனது அறைக்குள் 5 பேர் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக அவர்களுக்கும் கேசவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Also Read: Coimbatore Power Cut Tomorrow: கோவையில் நாளை மின்தடை- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ளுங்கள்…

இதில் ஆத்திரமடைந்த கும்பல், கேசவனை இரும்பு ராடால் தாக்கி காயப்படுத்தியதுடன், அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினையும் பறித்ததாக தெரிகிறது. மேலும் அவரை அறைக்குள் அடைத்து வைத்து, ரூ.2 லட்சம் பணம் கொடுத்தால் மட்டுமே வெளியே விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அருகில் தங்கியிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

போலீசார் வருவதை அறிந்த 5 பேர் கும்பல், கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து கீழே இருந்த சிமெண்ட் சீட் கூரையின் மீது குதித்து, அங்கிருந்த இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனர்.

Also Read: கல்லூரி வாழ்க்கை வீணாகிவிட்டது: கோவை மாணவர்கள் வேதனை!

இந்த சம்பவம் குறித்து கேசவன் அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆகாஷ், பாண்டி உள்ளிட்ட 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கொண்டையை மறைக்காத அண்ணாமலை- கோவையில் மாணிக்கம் தாகூர் தாக்கு!

கோவை: கொண்டையை மறைக்காமல் அமெரிக்காவில் இருந்து ஒருவர் வருகிறார் என அண்ணாமலையை மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். கோவை, சவுரிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியும்...

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...