கோவை மாணவி மரணம் : எஸ்.பி.வேலுமணி அறிக்கை!

கோவை: நீட் அச்சத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவையில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, கோவைபுதூர் பாரூக் நகரைச் சேர்ந்த தோழர் செந்தில் பிரபு. கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு (CITU) தொழிற்சங்க மாவட்ட செயலாளராக உள்ள இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

Advertisement

Also Read: கோவையில் இளைஞர்களுக்கு அழகுக்கலை, சிகை அலங்காரம் இலவசப் பயிற்சி

இவர்களில் மூத்த மகள் அனுகீர்த்தனா (19) எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து, நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருந்தார்.

Advertisement

இந்த நிலையில் “நான் நீட் தேர்வு எழுதி விட்டு மருத்துவக் கல்லூரியில் சேரக் காத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் தேர்வை ரத்து செய்து விட்டார்கள். இப்போது மீண்டும் தேர்வு எழுத பயமாக இருக்கிறது. தந்தை எனக்காக நிறைய செலவு செய்து விட்டார்கள், இனிமேல் அவர்கள் முகத்தில் நான் எப்படி ? விழிப்பேன் என்று தெரியவில்லை” என மன வருத்தத்தோடு குருஞ்செய்தி பதிவிட்டு விஷமருந்தி உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: கோவையில் பள்ளி பேருந்தை ரிவர்ஸ் எடுக்கும்போது ஏற்பட்ட விபத்து- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்…

மேலும் அன்பு மகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த ஆறுதலையும் தெரிவித்து கொள்கின்றேன்.

இவ்வாறு எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.