பேரூர் பட்டீசுவரர் கோவிலில் நாற்று நடவு விழா உற்சாகம்…

கோவை:பேரூர் பட்டீசுவரர் கோவிலில் சித்திரைமேழி ஆனி உற்சவ நாற்று நடவு விழா விமர்சையாக நடைப்பெற்றது.

உலக மக்கள் நலன் வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைமேழி ஆனி உற்சவ நாற்று நடவு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Advertisement

இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 13-ந்தேதி தேவேந்திரகுல வேளாளர் மடத்தில் கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 7 நாட்களாகக் காலை மற்றும் மாலை வேளைகளில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் ஸ்ரீ கேதாரீஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, கோவிலைச் சுற்றி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொன்னேர் பூஜையும், ஸ்ரீ கேதாரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் தேவேந்திரகுல வேளாளர் மடத்திற்கு எழுந்தருளும் நிகழ்வும் நடைப்பெற்றது. அங்கு செந்நெல் நாற்று எடுத்து வரப்பட்டு, கோவில் வயலில் இறங்கி நாற்று நடவு செய்யும் ஆனி உற்சவ நாற்று நடவு திருவிழா நடந்தது.

தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் வயலில் இறங்கி குலவையிட்டு நாற்று நடுவது செய்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் சப்பரத்தில் நாற்று நடவு வயலுக்கு எழுந்தருளி, பொருள் வேண்டுதல் நிகழ்ச்சியும், கோவிலைச் சுற்றி திருவீதி உலாவும் நடந்தது.

Advertisement

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகமும், தேவேந்திர குல வேளாளர் சமூக மண்டப அறக்கட்டளையும் இணைந்து செய்து இருந்தனர். இதில் திரளான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டர்‌.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவைக்கு இன்று கனமழை எச்சரிக்கை…

கோவை: கோவைக்கு இன்று வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. கோவை மாவட்டத்தில் இன்று (22.06.2026) கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்...

Latest News Coimbatore

Video

நாய்கள் குரைத்ததால் ஓட்டம் பிடித்த யானைகள்- கோவையில் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரல்…

கோவை: கோவை பூண்டி செம்மேடு சாலையில் உலா வந்த 2 காட்டு யானைகள் நாய்கள் குரைத்ததால் ஓட்டம் பிடித்த காட்சிகள் வைரலாகி வருகிறது கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்த பூண்டி செம்மேடு பிரதான சாலையில்...