கோவையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பறிமுதல்…

கோவை: கோவையில் அதிக ஒலி எழுப்பும்இரு சக்கர வாகன லைசன்சர்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் அதிக சத்தம் எழுப்பும் வாகன சைலன்சர்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அது குறித்து அவ்வப்போது காவல்துறையினர் ஆங்காங்கே சோதனைகளை மேற்கொண்டு அந்த சைலன்சர்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

கோவை மாநகரிலும் இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை நிறுத்தி போலீசார் அபராதம் விதித்து மீண்டும் அந்த சைலன்சர்களை உபயோகிக்க கூடாது என்ற வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும் சில வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை வாகனங்களில் பொருத்திக்கொண்டு இயக்கி வருகின்றனர். அதன் காரணமாக அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த சைலன்சர்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

அதன்படி கடந்த இரு தினங்களில்
332 இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மீது இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு,332 வாகனங்களில் இருந்து அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்களை போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சைலன்சர்கள் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில இன்று காட்சிபடுத்தப்பட்டது. அதனை கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் பார்வையிட்டு போக்குவரத்து காவல்துறையினரின் இப்பணியினை பாராட்டினர்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பொது மக்களிடம் அன்பாக அணுகுவதற்கு காவல்துறையினருக்கு பயிற்சி…

கோவை: கோவை மாநகர காவல்துறையினருக்கு அன்பான அணுகுமுறை சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் தலைமையில் காவல்துறையினர் பொதுமக்களிடம் அன்பாகவும்நட்புறவாகவும் மற்றும் மனிதநேயமிக்க...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.