கோவை: கோவையில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்மகமலம் பூவை பொதுமக்கள் வணங்கினர்.
கோவை மாவட்டம் சின்னத்தடாகம் பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்மக்கமலம் என்னும் நிஷாகந்தி பூ கனகராஜ் மகேஷ்வரி என்பவரது வீட்டில் 24 பூக்கள் பூத்துள்ளது. அதற்கு அவர்கள் கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து வணங்கினர்.
இது குறித்து தவகல் அறிந்த அக்கம்பக்கத்தினர் ஆவலுடன் வந்து பார்த்துச் சென்றனர்.
கோவை சின்னத்தடாகம் பகுதியில் கனகராஜ் மகேஷ்வரி என்பவரது வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் இரவில் பூக்கும் பிரம்மக்கமலம் என்னும் நிஷாகந்தி பூச்செடி உள்ளது.
நேற்று இரவு அச்செடியில் 24 பிரம்மக்கமல பூக்கள் பூத்துள்ளது. இதையடுத்து அவ்வீட்டார் அந்த பூவிற்கு கற்பூரம் காட்டியும் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் ஆர்வமுடன் வந்து இரவில் மட்டுமே மலர்ந்து காலையில் வாடிவிடும் பிரம்மகமல பூவை பார்த்துச் சென்றனர்.


