கோவையில் முதியவரிடம் தகராறில் ஈடுபட்ட திருநங்கை- வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி…

கோவை: முதியவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கையின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோவை, மாவட்டம் அன்னூர் பகுதியில் ஏழை முதியவர் ஒருவரை மிரட்டிப் பணத்தைப் பறித்ததோடு, அதனைத் தட்டிக்கேட்ட உறவினர்களை நடுரோட்டில் ஆபாசமான முறையில் மிரட்டிய திருநங்கைகளின் அதிரவைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கோவை, அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியில் வந்து கொண்டு இருந்த வயதான முதியவர் ஒருவரை, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு திருநங்கைகள் திடீரென வளைத்துப் பிடித்து உள்ளனர். அவரிடம் இருந்த 2,000 ரூபாய் பணத்தைக் கட்டாயப்படுத்திப் பறித்துக் கொண்டு தப்பியோட முயன்று உள்ளனர்.

கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தை இழந்து முதியவர் தவித்ததைக் கண்ட அவரது உறவினர்கள், உடனடியாக அந்தத் திருநங்கைகளைச் சாலையிலேயே மடக்கிப் பிடித்து, “பெரியவர் வச்சிருந்த காசை ஏன் பறிச்சீங்க ?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பி உள்ளனர்.

​அப்போது, தாங்கள் செய்த குற்றத்திற்காகப் பயந்து பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்குப் பதிலாக, இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இருந்த அந்த இரண்டு திருநங்கைகளில் ஒருவர், பொதுமக்களுக்கு முன்பாகத் தனது ஆடைகளைத் தூக்கி அநாகரிகமான முறையில் கூச்சலிடத் தொடங்கி உள்ளார்.

Advertisement

உன்னால என்ன பண்ண முடியும் ? தைரியம் இருந்தா வா… போலீஸ் ஸ்டேஷனுக்கே போலாம்!” எனப் படுபயங்கரமான கெட்ட வார்த்தைகளால் பேசி, அநாகரிகத்தின் உச்சத்திற்கே சென்று மிரட்டல் விடுத்து உள்ளார்.

திருநங்கைகளின் இந்த அத்துமீறலையும், ஆபாச மிரட்டலையும் அங்கு இருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ’ எடுத்து சமூக வலைதளங்களில் தட்டி விட்டு உள்ளனர்.

இந்த காட்சிகள் தற்போது வாட்ஸ்அப் பக்கங்களில் காட்டுத் தீயாய் பரவி, நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏழை முதியவர்களைக் குறிவைத்து அரங்கேறும் இதுபோன்ற பகல் கொள்ளைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அன்னூர் போலீஸார் இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து, விதியை மீறிய அந்தத் திருநங்கைகள் மீது உடனடியாக ‘எஃப்.ஐ.ஆர்’ பதிவு செய்து, இரும்புத் திரைக்குப் பின்னால் தள்ள வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

பயணிகளை தவிக்கவிட்டு சண்டையிட்டு கொண்ட பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள்- காவல்துறை எடுத்த நடவடிக்கை…

கோவை சின்னத்தடாகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் 24 பிரம்மகமலம் மலர்கள் ஒரே நேரத்தில் மலர்ந்து பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தின.