கோவை: கோவை மாநகராட்சியில் குடிநீரில் குளோரின் அளவு ஆய்வு செய்யப்படுகிறது.
கோவை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் உள்ளன. மாநகராட்சியை பொறுத்தவரை சில இடங்களில் 24 மணி நேரம் ஒரு சில இடங்களில் வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் குடிநீரில் மாற்றம் தென்படுவதாகவும் சில நேரங்களில் மஞ்சள் நிறத்திலோ அல்லது கழிவு நீர் கலந்தாற்போன்று குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். ஒரு இடங்களில் இதன் காரணமாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அறிவுறுத்தலின் பேரில் குடிநீரில் குளோரின் அளவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தொட்டிகளிலும் குடிநீர் குழாய்களிலும் உள்ள நீரை ஆய்வுக்காக எடுத்து அதில் குளோரின் அளவை ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குளோரின் அளவு சரியான விகிதத்தில் இல்லாத பட்சத்தில் அந்த பகுதியில் தீர்வு காணுவதற்கும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


