கலைத்துறையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு இலவச பயிற்சி- கோவை ஆட்சியரின் அறிவிப்பு…

கோவை: கலை ஆர்முள்ள குழந்தைகளுக்கு இலவச கலைப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசின் கலைப் பண்பாட்டுத்துறையின் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் 60 இடங்களில் சவகர் சிறுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது.

Advertisement

இம்மன்றங்களில் 5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவ, மாணவியர்களுக்கு அந்தந்த வட்டார பகுதிகளில் பயன்பாட்டில் இருந்து வரும் செவ்வியல் மற்றும் நாட்டுப்புறக் கலைகளில் (குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், யோகா, நாட்டுப்புற நடனம், சிலம்பம், ஜிம்னாஸ்டிக், ஓவியம், மற்றும் கைவினை) ஏதேனும் நான்கு கலைகளில் கலைப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் 5 முதல் 16 வயது வரை ள்ள மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு இலவசமாக கலைப்பயிற்சியினை பெறலாம். இதற்காக ஆண்டுடொன்றுக்கு பதிவு கட்டணமாக மிக குறைந்த தொகையாக ரூ.200/- மட்டும் (ஜுன் முதல் ஏப்ரல் வரை) உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இக்கலைப் பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்றுவரும் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி பொருட்கள் கலைப் பண்பாட்டுத்துறையால் வழங்கப்படுகிறது. மேலும் இங்கு பயிற்சி பெற்றுவரும் மாணவர்கள் கலை பண்பாட்டுத்துறையால் நடத்தபடும் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்பயிற்சி முகாம்கள் மற்றும் மாநில அளவில் நடத்தப்படும் கோடைக்கால பயிற்சி முகாம்குளிர்கால கைவினை கலைப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மாவட்ட கலைப் போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பெரும் மாணவ மாணவியர்களுக்கு துறையில் நடத்தப்படும் மாநில அளவிலான கலைப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கும் புதுடெல்லியில் நடைப்பெறும் தேசிய அளவிலான கலைப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது.

இறுதியாக வெற்றி பெறும் மத்திய அரசின் தேசிய விருதான பாலஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது. இப்போட்டிகளில் பங்கு பெற சென்று வருவதற்கான போக்குவரத்து உணவு செலவினம் ஆகியவை கலை பண்பாட்டுத்துறைால் வழங்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரி வளாகத்திலும் பொள்ளாச்சியில் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை குரலிசை, பரதநாட்டியம். ஓவியம், யோகா மற்றும் சிலம்பம் ஆகிய கலைபயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலை ஆர்முள்ள குழந்தைகள் இந்த இலவச கலைப்பயிற்சி பெற்று பயனடையுமாறும், இவ்வகுப்புகளில் சேர 9751528188 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் குடிநீரில் ஆய்வு செய்யும் பணிகள் துவக்கம்…

கோவை: கோவை மாநகராட்சியில் குடிநீரில் குளோரின் அளவு ஆய்வு செய்யப்படுகிறது. கோவை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் உள்ளன. மாநகராட்சியை பொறுத்தவரை சில இடங்களில் 24 மணி நேரம் ஒரு சில இடங்களில்...

Latest News Coimbatore

Video

கோவையில் பார்க்கிங்கில் இருந்த வாகனங்களின் சீட்டை கிழித்த நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை டவுன்ஹால் பகுதியில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை பிளேடால் சேதப்படுத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.