பார்ட்டி பண்ட் பற்றி திமுகவில் இருக்கும் போது தெரியாது- CPIM சண்முகம் பேட்டி…

கோவை: பார்ட்டி பண்ட் பற்றி திமுகவில் இருந்த போது தெரியாது என CPIM சண்முகம் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை பீளமேடு பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று கூறியதன் பின்னணி தற்போது புரிவதாகவும், எம்.எல்.ஏ.க்களிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் அதையே சுட்டிக்காட்டுவதாக குற்றம் சாட்டினார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக அல்லாத மாற்று ஆட்சியையே மக்கள் தேர்வு செய்துள்ளதாகவும், அதனடிப்படையில் தான் தற்போதைய ஆட்சி அமைந்துள்ளதாகவும் கூறினார். இடதுசாரி கட்சிகள் தேர்தல் முடிவை மதித்து வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவதாகவும், ஆனால் தேர்தல் முடிவை ஏற்க முடியாத திமுக, ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் குதிரைப் பேரம் கழுதை பேரம் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.

Advertisement

சில நாட்களுக்கு முன்பு மு.க. ஸ்டாலின் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று கூறியதன் பின்னணி தற்போது புரிவதாகவும், எம்.எல்.ஏ.க்களிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் அதையே சுட்டிக்காட்டுவதாகவும் குற்றம் சாட்டிய அவர் விருப்பத்தின் பேரில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது வேறு, பணம் கொடுத்து பேரம் பேசி கட்சி மாற வைப்பது வேறு என்று என்றார். அத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

டெல்லி பிரதிநிதியை நியமிப்பது முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம் என்றும், இடதுசாரி கட்சிகள் எந்த அரசியல் அணியிலும் இல்லாமல் தனித்து செயல்படுவதாகவும் தெரிவித்தார்., கன்னியாகுமரி மாவட்டத்தில் அணு கனிமச் சுரங்கத் திட்டத்திற்கான அனுமதியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Advertisement

பார்ட்டி பண்ட் விவகாரம் குறித்து திமுக கூட்டணியில் இருந்த போது தெரியாது என்றும் தற்போது பல்வேறு துறைகளில் பார்ட்டி பண்ட் விவகாரம் வெளியாவதை நிரூபிக்க வேண்டும் என தெரிவித்த அவர் அந்த குற்றசாட்டுகள் குறித்து எவ்வித அதிர்ச்சியும் இல்லை வருத்தமும் இல்லை என்று தெரிவித்தார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

புயலை கிளப்பும் கார் அறிவிப்பு விவகாரம்; தனி ரூட்டில் நம்ம கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி!

கோவை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எத்தனை பேரிடம், எத்தனை கார்கள் உள்ளன? யார் யாரிடம் கார் இல்லை என்பது குறித்து தற்போது...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...