கோவையில் மூடப்படும் டாஸ்மாக் பார்கள்…

கோவை: கோவையில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு வருகிறது.

Advertisement

கோவையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்பட்டு வந்த பார்கள், தமிழக அரசின் உத்தரவின்படி படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவு விதிமுறையை மீறியதாகக் கருதப்பட்ட 69 கடைகள் ஏற்கனவே மூடப்பட்டன.

இதையடுத்து, டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்பட்டு வந்த பார்களை ஜூலை 1 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

Advertisement

அந்த உத்தரவு அமலுக்கு வந்த நிலையில் அதிகாரிகள் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வந்த 213 பார்களும் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.

அரசின் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இந்த பார்கள் செயல்பட அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

புயலை கிளப்பும் கார் அறிவிப்பு விவகாரம்; தனி ரூட்டில் நம்ம கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி!

கோவை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எத்தனை பேரிடம், எத்தனை கார்கள் உள்ளன? யார் யாரிடம் கார் இல்லை என்பது குறித்து தற்போது...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...