பழைய பெயர் பலகையை மாற்றாமலேயே சட்டமன்ற அலுவலகத்தை திறந்த எஸ்.பி.வேலுமணி…

கோவை: பழைய பெயர் பலகையை மாற்றாமலேயே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டமன்ற அலுவலகத்தை திறந்துள்ளார்.

Advertisement

2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்பி வேலுமணி வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் தொகுதிக்கான சட்டமன்ற அலுவலகத்தை எஸ் பி வேலுமணி திறந்து வைத்தார்.

அதே சமயம் சட்டமன்ற அலுவலகத்தில் கடந்த ஆட்சியின் போது வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்படாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளது. அதில் இவர் வகித்த அரசு பொறுப்பும் கட்சி சார்ந்த பொறுப்பும் உள்ளன.

Advertisement

“கழக தலைமை நிலைய செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா” என்ற பெயர் பலகை மாற்றபடாமல் உள்ளது. அரசு சார்பில் தற்பொழுது இவர் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா இல்லை, கட்சி சார்ந்து இவரது வகித்த கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் என்ற பதவி இவரிடமிருந்து பறிக்கப்பட்டு செ.ம வேலுச்சாமிக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

புயலை கிளப்பும் கார் அறிவிப்பு விவகாரம்; தனி ரூட்டில் நம்ம கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி!

கோவை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எத்தனை பேரிடம், எத்தனை கார்கள் உள்ளன? யார் யாரிடம் கார் இல்லை என்பது குறித்து தற்போது...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...