கோவை:ஆழியார் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் 1.1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், இ.கா.ப. அவர்களின் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஜூலை 15 அன்று ஆழியார் காவல் நிலைய போலீசாருக்கு, வாய்க்கால் மேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
Also Read: சீட்டுப் பணம் கேட்டதில் தகராறு: இளம்பெண்ணை மரக்கட்டையால் தாக்கிய வாலிபர் கைது
அப்போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் உடுமலை பகுதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் (30) மற்றும் ஹரிஹர குகன் (26) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Also Read: சூலூர் எம்.எல்.ஏ முன்பே தகராறில் ஈடுபட்ட தவெகவினர்- பெண் மருத்துவமனையில் அனுமதி…
மேலும், போதைப்பொருள் விற்பனை அல்லது சட்டம்-ஒழுங்குக்கு எதிரான செயல்கள் குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்கள் தயக்கமின்றி கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை – 94981 81212 அல்லது வாட்ஸ்அப் எண் – 77081 00100 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.





