பேருந்தை நிறுத்தவே இல்லை”… பஸ்சில் ஏறிய இளம்பெண் கீழே விழுந்து காயம்! கோவையில் பரபரப்பு

கோவை: சிங்காநல்லூரில் இருந்து காந்திபுரம் நோக்கி இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்தில் ஏற முயன்ற இளம்பெண் கீழே விழுந்து காயமடைந்ததாகவும், அவரிடம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

Advertisement

கோவையில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் 88-ம் எண் அரசு நகரப் பேருந்து சிங்காநல்லூரில் இருந்து காந்திபுரம் வரை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை நவஇந்தியா பகுதியில் சில பெண்கள் பேருந்தில் ஏற முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, பேருந்து நடத்துனர் பெண்களிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும், பெண்கள் படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்தபோதே பேருந்தை இயக்குமாறு ஓட்டுநரிடம் கூறியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், படிக்கட்டில் ஏறிய இளம்பெண் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரது காலில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Also Read: “நீ வேறு சாதி… நான் வேறு சாதி” – கணவர் குடும்பத்தினர் மீது புதுப்பெண் பரபரப்பு புகார்!

சம்பவத்தை பார்த்தும் பேருந்தை நிறுத்தி இளம்பெண்ணுக்கு உதவாமல், ஓட்டுநரும் நடத்துனரும் பெண்களிடம் தகாத வார்த்தைகளை பேசியதாகவும், தொடர்ந்து பேருந்தை இயக்கிச் சென்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், பேருந்து நடத்துனர் தனது பெயரை தெரிவித்துவிட்டு, “என்ன முடியுமோ செய்து கொள்ளுங்கள்” என கூறியதாகவும் பெண்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு பேருந்து பணியாளர்களே இவ்வாறு அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கோவையில் விதிமீறும் வாகனங்களுக்கு செக் வைக்க புதிய கருவி- ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

எனவே, சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு உண்மை எனில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் திருட்டு கும்பல் அட்டகாசம்? வைரலாகும் VIDEO!

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் போதையில் மயங்கி கிடக்கும் பயணிகளை குறிவைத்து பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video

தடாகம் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை- வனத்துறை நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

கோவை: கோவையில் பசுமாட்டை தாக்க முயன்ற காட்டுயானையின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் காட்டு யானையை அடர்வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவை மாவட்டத்தில்...