மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம் வாங்க!

கோவை: மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப்பெறாத தகுதி வாய்ந்த பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களில் 1.14 கோடி பெண்களுக்கு தற்போது மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இன்னும் உரிமைத்தொகை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், திட்டத்தில் விடுபட்ட, தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

Advertisement

இந்த நிலையில், ஜூலை 15ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பம் மீது 45 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை மாதம் 15ம் தேதி முதல் மக்கள் குறைகளைத் தீர்க்கும் விதமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் என்றும், அதன் வாயிலாக விடுபட்ட பெண்கள், உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க என்ன தேவை?

இந்த முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்க நினைக்கும் பெண்கள், முகாம் நடைபெறும் நாளில் ரேஷன் அட்டை, புகைப்படம் (பாஸ்போர்ட் சைஸ்), ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு பாஸ்புக், ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

கோவையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எங்கு? எப்போது? நடைபெறும் என்ற விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிடும் போது அதனைப் பகிர்கிறோம்.

இதுபோன்ற செய்திகள் மற்றும் கோவைக்கான முக்கிய செய்திகளை அறிந்துகொள்ள எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைந்து கொள்ளலாம்.

குழுவில் இணைய இங்கே க்ளிக் செய்யவும் 👈

இந்த அறிவிப்பை மகளிர் உரிமைத் தொகைக்காக காத்திருக்கும் பெண்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

இரண்டு நாட்களில் ஸ்டிரைக்…! கோவை மருந்து வணிகர்கள் சங்கம் அறிவிப்பு..!

கோவை மருந்து வணிகர்கள் சங்கம் GSR 220 விதிமுறைக்கு எதிராக மே 20 நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது, ஆன்லைன் விற்பனை தடை கோரிக்கை வைக்கப்பட்டது உள்ளது

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.