கோவை எஸ்.பி.ஐ. ஊழியர்கள் 60 ஆண்டுகளுக்குப் பின் தர்ணா: மக்களே 4 நாட்கள் ரெடியாக இருந்துக்கோங்க…!

கோவை: பணியாளர்கள் தேர்வு முறையை மாற்றக் கோரியும், பாதுகாவலர்கள் நியமிக்கப்படாததைக் கண்டித்தும் கோவையில் எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

எஸ்.பி.ஐ. வங்கியில் பாதுகாவலர்கள் நியமனம் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த சூழலில், பாதுகாவலர்களை நியமித்தல், பியூன் பணியிடங்களை அரசுப் பணியிடங்களாக நிரப்புதல் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் வரும் மே 25 மற்றும் 26ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதனிடையே, எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் சங்கத்தின் கோவை மண்டலம் சார்பில், கோவை தலைமை அலுவலகத்தில் இன்று அடையாள தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Advertisement

இதில், 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கருப்பு நிற உடை அணிந்து காலை முதல் மாலை வரை தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சங்கத்தின் கோவை மண்டல துணைப் பொதுச்செயலாளர் செந்தில்குமார் கூறுகையில்,.

Advertisement
SBI employees protest Coimbatore

“எஸ்.பி.ஐ. வங்கியில் பாதுகாவலர்கள் நியமிக்கப்படாததால், ஊழியர்களின் பாதுகாப்பும், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும், பியூன் பணியிடங்களில் அவுட்சோர்சிங் முறை பின்பற்றப்படுவதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எங்களது போராட்டம் வரும் மே 25 மற்றும் 26ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அதற்கு முந்தைய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் இயங்காது. இதனால் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.

இதுவரை பல்வேறு வங்கிகளுடன் இணைந்து எஸ்.பி.ஐ. ஊழியர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், 60 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்.பி.ஐ. ஊழியர்கள் மட்டும் தனியாக போராட்டம் நடத்துகிறோம்.

நிர்வாகத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்றார்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

Comments are closed.

Recent News

TNPSC குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியீடு: விண்ணப்பிக்க லிங்க் இதோ…

TNPSC குரூப்-1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 26 காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. செப்டம்பர் 6-ம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஜூன் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...