இரண்டு நாட்களில் ஸ்டிரைக்…! கோவை மருந்து வணிகர்கள் சங்கம் அறிவிப்பு..!

கோவை: மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய ஸ்ட்ரைக் நடைபெற உள்ளதாக கோவை மருத்து வணிகர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Advertisement

நாடு முழுவதும் வரும் மே 20ஆம் தேதி முதல் மருந்து வணிகர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய தடை செய்யவும், மருந்து விற்பனையில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் அளவில்லாத தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள “GSR 220” என்ற புதிய விதிமுறையால் சிறிய மருந்துக் கடைகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

“இந்த GSR 220 விதிமுறையின் படி, மருந்து நிறுவனங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு மருந்தின் விவரங்களும் முழுமையாக கண்காணிக்கப்படும். இதன் மூலம் போலி மருந்துகள் விற்பனையை தடுக்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

ஆனால், இந்த நடைமுறையை செயல்படுத்த அதிக செலவும், கூடுதல் தொழில்நுட்ப வசதிகளும் தேவைப்படுவதால் சிறிய மற்றும் நடுத்தர மருந்து கடைகள் சிரமத்திற்கு உள்ளாகும்” என வணிகர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே மருந்து வணிகர்கள் சங்கம் மே 20ஆம் தேதி ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

TNPSC குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியீடு: விண்ணப்பிக்க லிங்க் இதோ…

TNPSC குரூப்-1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 26 காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. செப்டம்பர் 6-ம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஜூன் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...