பிரிந்த காதல் மனைவி: கோவையில் போட்டோகிராப்பர் விபரீத முடிவு!

கோவை: காதல் மனைவி பிரிந்து சென்றதால் கோவையில் போட்டோகிராப்பர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் அஜய் கிருஷ்ணன் (28). போட்டோகிராப்பர்.

Advertisement

இவர், கோவை வடவள்ளியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சென்னையை சேர்ந்த புவனேஸ்வரி என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் அஜய் கிருஷ்ணனுக்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி மது குடித்து வந்து அஜய் கிருஷ்ணன் தனது மனைவி புவனேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இதன் காரணமாக புவனேஸ்வரி தனது கணவர் மீது கோபம் கொண்டு அவரை பிரிந்து சென்றார். இதனால் அஜய் கிருஷ்ணன் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

நேற்று வீட்டில் தனிமையில் இருந்த அஜய் கிருஷ்ணன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent News

கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் நடந்த கொள்ளை- ஆட்டோ ஓட்டுநர் கைது…

கோவை: கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிறுப்பு வளாகத்தில் 13 வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு உதவிய குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம்...

Video

Join WhatsApp