கோவையில் அகில இந்தியக் கூடைப்பந்து இறுதிப்போட்டி- வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கிய ஆதவ் அர்ஜுனா…

கோவை: கோவையில் நடைபெற்ற கூடைப்பந்து இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரிசுகளை வழங்கினார்.

Advertisement

கோவையில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்

கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கடந்த மே 27-ம் தேதி துவங்கி 5 நாட்கள் நடைபெற்றது.

இதில் ஆண்கள் பிரிவில் இந்திய விமானப்படை – புதுடெல்லி, இந்திய இராணுவம் – புதுடெல்லி, இந்திய கடற்படை – லோணாவாலா, கேரள மாநில மின்சார வாரியம் (KSEB) – திருவனந்தபுரம், பேங்க் ஆஃப் பரோடா – பெங்களூரு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – சென்னை, கேரள போலீஸ் – திருவனந்தபுரம், கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம் (CDBA) – கோயம்புத்தூர் அணிகளும்

Advertisement

பெண்கள் பிரிவில் சவுத் சென்ட்ரல் ரெயில்வே – செக்கந்தராபாத், சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே – ஹுப்ளி, சதர்ன் ரெயில்வே – சென்னை, ஐ.சி.எஃப். – சென்னை, கேரள மாநில மின்சார வாரியம் (KSEB) – திருவனந்தபுரம், சென்ட்ரல் ரெயில்வே – மும்பை, கேரள போலீஸ் – திருவனந்தபுரம், கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம் (CDBA) – கோயம்புத்தூர் ஆகிய ஆணிகள் பங்கேற்றன.

முன்னதாக நடைபெற்ற மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கான போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் இந்திய விமானப்டை அணியும் விளையாடியது. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 70 – 51 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.

Advertisement

பெண்கள் பிரிவில் தென் மேற்கு ரயில்வே அணியை எதிர்த்து மத்திய ரயில்வே அணி விளையாடியது. இதில் தென் மேற்கு ரயில்வே அணி 89 – 55 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தை பிடித்தது.

ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய இராணுவ அணி 95 / 77 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. பெண்கள் பிரிவில் தென் மத்திய ரயில்வே அணி 74 / 67 என்ற புள்ளி கணக்கில் கேரளா மாநில மின்சார வாரிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற இந்திய இராணுவ அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை வழங்கப்பட்டது, இரண்டாம் இடம் பிடித்த இந்தியா கப்பல் படை அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசும் மற்றும் டாக்டர் என். மகாலிங்கம் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக விளையாடிய இந்திய ராணுவ அணியின் வீரர் ராகுல் குமாருக்கு சிறந்த விளையாட்டு வீரர் விருது வழங்கப்பட்டது.

பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற தென் மத்திய ரயில்வே அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்த கேரள மாநில மின்சார வாரிய அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பையும் மேலும் சிறப்பாக விளையாடிய தென் மத்திய ரயில்வே அணியின் வீராங்கனை கே. பி. ஹர்ஷிதாவுக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருது வழங்கப்பட்டது.

இறுதி போட்டிக்கு தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் துணைத் தலைவரும், கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் தலைவரும், சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநருமான செல்வராஜ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக பொதுப்பணி துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் அகில இந்திய கூடைப்பந்து கழக தலைவருமான ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பேட்மின்டனில் வெற்றிக்கொடி நாட்டி சீனா செல்லும் கோவை வெங்கீஸ் பயிற்சி மைய மாணவி!

சேலத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி அனு ஸ்ரீ, கோவை வெங்கீஸ் பேட்மின்டன் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, சீனாவில் நடைபெறும் ஏசியன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவுக்காக பதக்கம் வெல்வதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...