கோவையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்- கலந்து கொள்ள விவரங்கள் இதோ…

கோவை: போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் செய்தியை வலியுறுத்தவும்,

மாவட்டத் தலைநகரங்களில் ஸ்டார்ட் RUN ஸ்டாப் DRUGS போதைப்பொருள் ஒழிப்பு ஓட்டம் 26.06.2026 அன்று காலை 5.30 மணிக்கு முன் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

ஸ்டார்ட் RUN. ஸ்டாப் DRUGS போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் 2026 ல் 14 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள். விளையாட்டு வீரர்கள், அரசு அதிகாரிகள், என்.சி.சி. என்.எஸ்.எஸ். சாரணர் மற்றும் வழிகாட்டிகள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.

Advertisement

ஸ்டார்ட் RUN ஸ்டாப் DRUGS போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் 2026ல் பங்கேற்க தாங்கள் மருத்துவ ரீதியாக தகுதியுடையவர்கள் என்றும் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பங்கேற்கிறோம் என்பதனை உறுதிப்படுத்திட வேண்டும்.

நேரு விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட, பாதுகாப்பான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட பாதையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தைக் நடத்தப்பட உள்ளதுபங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வசதிக்கான விரிவான ஏற்பாடுகள், குடிநீர் வசதிகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நிகழ்ச்சி டி-ஷர்ட் SDAT மூலம் வழங்கப்படும்.

இதில் கலந்து கொள்ளும் அனைவரும் காலை 5.30 மணிக்கு முன்னரே ஆதார் நகலுடன் வருகையினை பதிவு செய்தல் வேண்டும். மேலும் தகவல்களுக்கு 0422-2380010 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு ஆட்சித்தலைவர் மாவட்ட பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கணபதி மாநகரில் புதிய பூங்கா- ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றை நடவு செய்த மாநகராட்சி ஆணையாளர்…

கோவை: கணபதி மாநகரில் புதிய பூங்கா பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்து மரக்கன்றை நட்டு வைத்தார். கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி மாநகர். 4வது பிளாக் பகுதியில், மாநகராட்சி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...