மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் அறிவிப்பு…

கோவை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் மாநில விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் மாநில விருத்துக்கு நேரடியாக விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

தனிநபர் சிறப்பாக மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தொண்டுயாற்றிமைக்கு தேசிய விருதுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் ரூ.50,000 /- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்,

Advertisement

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலை வாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்,

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர்க்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி, மாநில விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் / நிறுவனங்கள் இதற்கான விவரங்களை www.awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 25.06.2026க்குள் கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்த நபர்கள்/ நிறுவனங்கள் நேரடியாக விண்ணப்பிக்குமாறும் மற்றும் விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 25.06.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்ட்டுள்ளது. இது குறித்து மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தை (0422-2380381 9499933471) தொடர்பு கொள்ளவும்

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கணபதி மாநகரில் புதிய பூங்கா- ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றை நடவு செய்த மாநகராட்சி ஆணையாளர்…

கோவை: கணபதி மாநகரில் புதிய பூங்கா பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்து மரக்கன்றை நட்டு வைத்தார். கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி மாநகர். 4வது பிளாக் பகுதியில், மாநகராட்சி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...