பயணிகள் ஆட்டோவில் சரக்கு செல்வதா? கோவை ஆட்டோ டிரைவர்கள் குமுறல்!

கோவை: பயணிகள் ஆட்டோக்களில் சரக்குகள் ஏற்றிச் செல்வது தடுக்கப்படாமல் இருப்பதால் கடும் இழப்பைச் சந்தித்து வருவதாக கோவையைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர்கள், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Advertisement

கோவை மாவட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்ட பயணிகள் ஆட்டோக்கள் இயங்கி வரும் நிலையில், அவ்வப்போது இந்த ஆட்டோக்கள் மூலம் சரக்குகளும் ஏற்றிச் செல்லப்படுவதாக சரக்கு ஆட்டோ டிரைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனிடையே, கணபதி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள ஆட்டோக்களில் வணிகச் சரக்குகளையும் ஏற்றிச் செல்ல அனுமதிப்பதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement

இதுகுறித்து ஆட்டோ டிரைவர் ஜான் பீட்டர் கூறுகையில்,

“கோவை மாவட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடகை ஆட்டோக்கள் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே, பயணிகள் ஆட்டோக்களில் வணிகச் சரக்குகள் ஏற்றிச் செல்லப்படுகின்றன.

Advertisement

எங்களது சரக்கு ஆட்டோக்களில் பொதுமக்களை ஏற்றிச் சென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், பயணிகள் ஆட்டோக்களில் சரக்குகள் ஏற்றிச் செல்வதை யாரும் கண்டுகொள்வதில்லை.

இதனால் ஒரு ஆட்டோவுக்கு நாளொன்றுக்கு ரூ.600 வரை இழப்பும், மாதத்திற்கு ரூ.50,000 வரை வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

எனவே, பயணிகள் ஆட்டோக்களில் வணிகச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை வந்த இந்திய தேர்தல் ஆணையர்- தமிழ்நாட்டு மக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பு…

கோவை: தமிழ்நாட்டில் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு நடந்ததற்கு மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தேர்தல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...