எஸ்.பி.வேலுமணிக்கு மாற்றாக பதவி ஏற்றுக்கொண்டார் செ.ம.வேலுச்சாமி…

கோவை: அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக செ.ம வேலுச்சாமி இன்று பதவி ஏற்று கொண்டார்.

Advertisement

சட்டமன்றத் தேர்தல் முடிந்ததை தொடர்ந்து அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ் பி வேலுமணி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் சிலர் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து பிறகு அந்த ஆதரவை திரும்ப பெற்றனர்.

இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு மாற்றாக அந்த பதவியை செ.ம வேலுச்சாமிக்கு வழங்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று செ.ம.வேலுச்சாமி கோவை அண்ணாசிலை பகுதியில் உள்ள அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் கோப்புகளில் கையெழுத்திட்டு பதவி ஏற்றுக் கொண்டார்.

Advertisement

அவருக்கு கோவை மாவட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி அருண்குமார், தாமோதரன், அம்மன் அர்ஜுனன், செல்வராஜ் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். மேலும் அதிமுக தொண்டர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 வயது வாலிபர் மீது, மாநகர காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...