கோவை அரசு மருத்துவமனை செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில், அரசியல் ரீதியிலான கருத்துகளும் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன. கோவை அரசு மருத்துவமனையில் பணிச்சுமையைக் குறைக்க வலியுறுத்தியும், புதிய செவிலியர்களை உடனடியாக நியமனம் செய்யக்கோரியும் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் இன்று திரண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை நிலவுவதால், இருக்கும் பணியாளர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக வேதனை தெரிவித்த போராட்டக்காரர்கள், நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை அளிக்க புதிய நியமனங்கள் மிகவும் அவசியம் என வலியுறுத்தினர்.

Advertisement

இந்த போராட்டத்தின்போது ஊடகங்களிடம் பேசிய செவிலியர்கள், “எங்கள் குடும்பங்கள் அனைத்தும் தம்பி முதல்வர் விஜய்க்குத்தான் வாக்களித்தோம் எனவே எங்கள் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” எனக் குரல் எழுப்பினர்.

மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் திரண்டு முழக்கங்களை எழுப்பியதால் சிறிது நேரம் அங்கு விறுவிறுப்பான சூழல் நிலவியது. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் செவிலியர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

கோவை: கோவையில் ஆகஸ்ட் மாதம் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்....

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...