கோவை: பல மாதங்கள் கழித்து நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
கோவையில் பல மாதங்கள் கழித்து ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதில் சிலர் இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழக கொடிகளை எடுத்து வந்து நடனம் ஆடினர்.
கோவையில் தனியார் அமைப்பின் சார்பிலும் தனியார் செய்தி குழுமத்தில் சார்பிலும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியானது நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் நீண்ட நாட்கள் கழித்து இன்று நடத்தப்பட்டது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் நடைபெற்ற இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக ஆடிப்பாடி கொண்டாடினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பெரிய அளவிலான பொம்மைகள் இடம்பெற்று இருந்தது குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. பலரும் அவர்களது வளர்ப்பு பிராணிகளை அலங்கரித்து எடுத்து வந்தனர். மேலும் இதில் பேஸ் பெயிண்டிங் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் இடம் பெற்றிருந்தது. இதில் சில இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழக கொடிகளுடன் வந்து நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது.
ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.



