கோவை மத்திய சிறையில் கைதி மீது தாக்குதல்; கொதிக்கும் டீ ஊற்றிய 3 கைதிகள் மீது வழக்கு

கோவை: கோவை மத்திய சிறையில் கைதி ஒருவரை தாக்கி, அவரது முகத்தில் கொதிக்கும் டீ ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 3 கைதிகள் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் கே. சகாதேவன் (33). இவர் நீதிமன்ற உத்தரவின் படி சமீபத்தில் திருப்பூர் சிறையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

சிறை நிர்வாகத்தின் தகவலின்படி, குற்றச்சாட்டுக்கு உள்ளான கைதியான சிரஞ்சீவியும், கோவை சிறைக்கு வருவதற்கு முன்பு திருப்பூர் சிறையில் தான் இருந்துள்ளார். அப்போதே சகாதேவனுடன் அவருக்கு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Read news: தன் மீதும், மக்கள் மீதும் நம்பிக்கை இல்லாதவனே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவான்; கோவையில் சீமான் தாக்கு

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை சகாதேவன் டீ வாங்கச் சென்றபோது, திருப்பூர் சிறையில் ஏற்பட்ட பழைய பிரச்சினையை காரணமாக வைத்து சிரஞ்சீவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் மோதலாக மாறியிருக்கிறது.

அப்போது சிரஞ்சீவியின் சிறை நண்பர்களான கண்ணன், ரியாஸ் ஆகியோருடன் சேர்ந்து மூவரும் சகாதேவனை தாக்கி, கொதிக்கும் டீயை அவரது முகத்தில் ஊற்றியுள்ளனர். வலியால் துடித்த சகாதேவனை சிறை ஊழியர்கள் உடனடியாக சிறை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்தனர்.

Read news: கோவை திமுகவில் மீசை வைத்த ஆம்பிளைகள் இல்லை- கே.ஆர்.ஜெயராம் பிரச்சாரம்…

இந்த நிலையில், சகாதேவன் அளித்த புகாரின் அடிப்படையில் சிரஞ்சீவி, கண்ணன், ரியாஸ் ஆகிய மூன்று சிறைக் கைதிகள் மீதும் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

புலியகுளத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டிய செந்தில் பாலாஜி!

அம்மன்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயர் சூட்டிய செந்தில் பாலாஜி கவனம் ஈர்த்தார்.

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...