அடிக்கடி வந்த ஆண்கள்… சிக்கிய விபசார கும்பல்… கோவையில் ஷாக்!

கோவை: கோவையில் வீடு வாடக்கைக்கு எடுத்து வெளியூரில் இருந்து பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்திய விபச்சார புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

மெட்ரோ நகரான கோவையில் பல்வேறு கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்களைக் குறிவைத்து பாலியல் தொழில் ஜோராக நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் மூலம் ஆண்களைக் கவர்ந்து, வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்துவதுபோல விபசாரம் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், தனியாக சிக்கும் ஆண்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் ஒரு கும்பல், விபசாரத்திற்கு அழகிய பெண்கள் இருப்பதாகக் கூறி அவரை தனியாக அழைத்து வந்த ஒரு கும்பல், அவரை ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கவைத்து, அதனை வீடியோ எடுத்தது. பின்பு அதனை வைத்து மிரட்டி, அடித்து அவரிடம் இருந்த பணம் நகைகளை மோசடி செய்தது. இதுகுறித்து தொழிலதிபர் புகாரின் பேரில் போலீசார் அந்த கும்பலைத் தேடி வருகின்றனர்.

Advertisement

இதனிடையே ராமநாதபுரத்தில் குடும்பம் நடத்துவதுபோல் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடைபெற்றது அம்பலமாகியுள்ளது.

ராமநாதபுரம் அகஸ்தியன் பேட்டையில் உள்ள ஒரு வீட்டுக்கு அடிக்கடி, சில ஆண்கள் வந்து சென்றனர். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் நேற்று ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisement

அதன்பேரில், போலீசார் நேற்று அந்த வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, வாடகைக்கு வீடு எடுத்து வெளியூரில் இருந்து பெண்களை வரவழைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விபசார புரோக்கரான பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவக்குமார் (43) என்பவரைக் கைது செய்தனர்.

பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குடியிருப்புகள் நிறைந்த அந்த தெருவில் நடைபெற்ற இந்த சம்பவம் ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. தமிழக வெற்றி கழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போலவே பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்திட...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...