கோவை: கோவை வடக்கில் வானதி சீனிவாசனுக்கு பாஜக உள்ளக எதிர்ப்பு எழுந்ததாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் பாஜகக்கு வடக்கு தொகுதி ஒன்றே ஒதுக்கப்பட்டுள்ளது.
வானதி vs அண்ணாமலை
கோவை வடக்கு தொகுதியை கைப்பற்ற வானதி சீனிவாசன் மற்றும் அண்ணாமலை இடையே கடும் போட்டி நிலவியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த தொகுதியில் போட்டியிட அண்ணாமலை கட்சியின் பல்வேறு தலைவர்களிடம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
உதயசூரியன் சின்னத்தை வெற்றி பெற செய்வேன்- கோவை வேட்பாளர் செந்தில்பாலாஜி சபதம்…
ஆனால், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியதையடுத்து, கட்சியிலேயே அவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடியை வரவேற்க கூட அண்ணாமலை செல்லாமல் ஒதுங்கியிருந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மறுபுறம், கோவையில் வானதி சீனிவாசனுக்கு உள்ளூர் பாஜகவினர் மற்றும் சில ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது சாத்தியமில்லை என்ற கருத்து பரவலாக நிலவி வந்தது. அவர் போட்டியிட 99 சதவீதம் வாய்ப்பு இல்லை என்றே பலர் கருதி வந்ததாகவும் கூறப்படுகிறது.
டெல்லி முயற்சியில் சீட் உறுதி செய்தாரா வானதி?
ஆனால், டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களை அணுகி, வானதி சீனிவாசன் தனது சீட்டை உறுதி செய்து கொண்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் கோவை பாஜக வட்டாரத்தில் அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, கோவையில் உள்ள பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆதரவு அமைப்புகளில் சிலர், வானதி சீனிவாசனுக்கு தேர்தல் பணிகளில் முழுமையாக ஒத்துழைக்க வேண்டாம் என்ற மனநிலையிலேயே இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
உள்ளக அதிருப்தியால் பிரசாரத்தில் சிக்கலா?
அவர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டாலும், கட்சியினர் மற்றும் ஆதரவு அமைப்புகள் தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்ற மாட்டார்கள் என்றும், வானதி சீனிவாசன் தனது ஆதரவாளர்களை மட்டும் வைத்து பிரசாரம் மற்றும் தேர்தல் பணிகளை மேற்கொள்ளட்டும் என்ற கருத்தும் சில தரப்புகளில் நிலவுவதாக கூறப்படுகிறது.
இதனால், வானதி சீனிவாசன் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றாலும், தனியாகவே களமிறங்க வேண்டிய நிலை உருவாகலாம் என்ற பேச்சு கோவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேள்விக்குறியான வெற்றி?
மேலும், கோவை வடக்கு தொகுதியில் பாஜகக்கு வெற்றி கிடைப்பது மட்டுமல்ல, குறைந்தபட்சம் 2வது இடமாவது கிடைக்குமா என்ற கேள்வியையே அவரது கட்சியினரே எழுப்பி சாடி வருவதாக கூறப்படுகிறது.
மேளதாள ஊர்வலத்துடன் வேட்புமனு தாக்கல்; கவுண்டம்பாளையத்தில் நாதக வேட்பாளர் பரபரப்பு
இதனால், கோவை வடக்கு தொகுதியில் பாஜகவின் தேர்தல் களம் தற்போது கடும் உள்ளக அதிருப்தி, தலைமை மட்ட போட்டி மற்றும் ஒத்துழைப்பு குறைவு போன்ற காரணங்களால் பரபரப்பாக மாறியுள்ளது.
கோவை வடக்கு தொகுதியில் பாஜகவின்ன் உள்ளக குழப்பம் அடுத்த கட்டத்தில் எந்த அளவிற்கு தேர்தல் முடிவை பாதிக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

