தொகுதி மாறிய நயினார்… இதுதான் காரணமா?

2021 சட்டப்பேரவை தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆன தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வரும் தேர்தலில் தொகுதி மாறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக வேட்பாளர் தேர்வுக்கான முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார்.

Read news: கோவையில் ஜெயின் சமூகத்தினரிடம் ஆதரவு திரட்டிய செந்தில் பாலாஜி…

Advertisement

கூட்டத்தில், ஒவ்வொரு தொகுதியுக்கும் தலா மூன்று பேர் அடங்கிய பரிந்துரைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கட்சியின் தேசிய தலைமையிடம் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இறுதி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nainar and Piyush

இந்நிலையில், மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று சென்னை வருகை தர உள்ளார். அவரின் தலைமையில் நடைபெறும் மத்திய தேர்தல் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, பாஜக வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Read news : சுவர் இடிந்து விழுந்து தாய், மகன் படுகாயம்; வீட்டு உரிமையாளர், காண்டிராக்டர் மீது வழக்கு

இதற்கிடையில், திருநெல்வேலி தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ மற்றும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த முறை சாத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்ற தகவல் வெளியாகி, பின்னர் அவர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிப் பட்டியலில் திருநெல்வேலி இடம்பெறாததும் இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

Nellai Nainar NAgendran

இதுகுறித்து விளக்கம் அளித்த நயினார் நாகேந்திரன், “திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வேண்டும் என அஇஅதிமுக கேட்டுக்கொண்டதால், அந்த தொகுதியை அவர்களுக்கு ஒதுக்கிவிட்டோம். அதேபோல், அவர்கள் முன்பு போட்டியிட்ட சாத்தூர் தொகுதியில் நான் களமிறங்குகிறேன்,” என்று தெரிவித்தார்.

மேலும், “ஊருக்கே ராஜாவானாலும் தாய்க்கு பிள்ளைதான் என்பதுபோல், நான் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் நெல்லை மக்களிடம் கொண்டுள்ள பாசம் குறையாது. நான் அவர்களுடைய வீட்டுப் பிள்ளை. வரும் ஏப்ரல் 4ஆம் தேதி சாத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்,” என அவர் கூறினார்.

இந்த மாற்றம், கூட்டணி அரசியலில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் விளைவாக பார்க்கப்படுவதுடன், தேர்தல் சூழலில் புதிய அரசியல் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

Flipkart Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

TNPSC குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியீடு: விண்ணப்பிக்க லிங்க் இதோ…

TNPSC குரூப்-1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 26 காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. செப்டம்பர் 6-ம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஜூன் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...