சூலூர் அருகே நூதன வழிபாடு…

கோவை: கோவை சூலூரில் தலையில் தேங்காய் உடைத்து நூதன முறையில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement

கோவை சூலூர் அருகே தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையடி வாங்கி பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மகாலட்சுமி அம்மன் கோவிலின் 3ஆம் ஆண்டு முப்பெரும் விழா மற்றும் நூதன நேர்த்திக்கடன் வழிபாடு இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவின் துவக்கமாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

இதனைத் தொடர்ந்து, அம்மனின் திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, பக்தி பரவசத்துடன் மேளதாளங்கள் முழங்க, கோவிலின் பூசாரிக்கு அருள் வந்து ஆடியபடி, வரிசையில் அமர்ந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களின் தலையில் பூஜை செய்யப்பட்ட தேங்காய்களை ஒவ்வொன்றாக உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.

தலையில் தேங்காய் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பக்தர்கள் அனைவரும் தங்களது மற்றொரு வினோத நேர்த்திக்கடனான ‘சாட்டையடி’ வழிபாட்டை மேற்கொண்டனர். பூசாரி அருள் வந்து பக்தர்களுக்கு சாட்டையடி வழங்கி ஆசி அளித்தார்

Advertisement

இந்த நூதன மற்றும் வினோத வழிபாட்டைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரண்டு வந்து வியப்புடன் சாமி தரிசனம் செய்தனர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருவதையொட்டி முக்கிய பகுதிகளில் 48 மணி நேர டிரோன் தடை அமல்படுத்தப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...