அடிபட்ட மயிலை ஆம்புலன்ஸில் அழைத்து சென்ற ஓட்டுநர்- குவியும் பாராட்டுக்கள்!

கோவை: கோவையில் விபத்தில் சிக்கிய மயிலை ஆம்புலன்ஸில் அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.

கோவை, சிங்காநல்லூர் அருகே மின்கம்பத்தில் மயில் ஒன்று அடிபட்டு காயமடைந்துள்ளது. அதனை பார்த்த அப்பகுதி மக்கள், MEDI SQUAD ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரபத், படுகாயமடைந்த மயிலை திறமையாக மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கோவை வனத்துறை அலுவலகத்திற்கு விரைந்தார்.

மயில் மீட்கப்பட்டு, சரியாக ஏழு நிமிடங்களில் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வனத்துறை அதிகாரிகளின் பரிசோதித்ததில் காயமடைந்த ஆண் மயிலுக்கு நெஞ்சுப் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து அதற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

ஓட்டுநர் பிரபத்தின் இந்த துரிதமான செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றதோடு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்…

கோவை: விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை முன்னிட்டு நாளை கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கோவை மாநகரில் நாளை 16.09.2026 ஆம் தேதி புதன் கிழமை விநாயகர் சிலை ஊர்வலமானது 12.00 மணிக்கு குனியமுத்தூர்...

Video

தடாகத்தில் மீண்டும் வேட்டையன்- மக்கள் அச்சம்…

கோவை: தடாகம் நஞ்சுண்டாபுரம்மீண்டும் வலம் வந்த வேட்டையன்காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை செடி,...