பினராய் விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை- கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்…

கோவை: பினராய் விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை கண்டித்து கோவையில் சிபிஐஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராய் விஜயன் இல்லத்திலும் அவருக்கு நெருக்கமானவர்கள் இல்லத்திலும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனை முடிந்து செல்லும் பொழுது பினராய் விஜயனின் ஆதரவாளர்கள் சிலர் அமலாக்க துறை அதிகாரிகள் சென்ற காரை தாக்கினர்.

இந்நிலையில் அமலாக்கத் சோறை சோதனையை கண்டித்து கோவையில் சிபிஐஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக அரசை கண்டித்தும் காங்கிரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் ஆர்ப்பாட்டம் சிபிஐஎம் மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை வருமானத்துறை பொய் வழக்கு போடக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் எந்த ஒரு சோதனைகளும் நடைபெறுவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

Comments are closed.

Recent News

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 வயது வாலிபர் மீது, மாநகர காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...