கோவை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்- முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்…

கோவை: கோவையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் (29.05.2026) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், முதுநிலை மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு)பழனிகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை துறை சார்பாக இரசாயன மற்றும் அங்கக உரங்கள் தொடர்பான கருத்துக் காட்சியும், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை சார்பாக இரண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவன மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தொடர்பாக கருத்துக்காட்சியும் தோட்டக்கலை துறை சார்பாக திரவ நிலை அங்கக உயிர் உரங்கள் குறித்த கருத்துக்காட்சியும்,

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை லிட் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான வேளாண் இடுபொருட்கள் காட்சியும், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை சார்பாக இரண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவன மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தொடர்பாக கருத்துக்காட்சியும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

Advertisement

மேலும் இக்கூட்டத்தில் விவசாயிகள் நீர் வழிப்பாதையிலுள்ள முட்புதர்களை அகற்றவும், குளம், குட்டை ஆக்கிரமிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் குளம்குட்டைகளை தூர்வாருமாறும்சாலையோரங்களிலுள்ள முட்புதர்களை அகற்றவும், தென்னை நார் கழிவுகள் மூலம் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும்.

காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்திடவும், சட்டபூர்வமற்ற நில அபகரிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், நொய்யல், கௌசிகா நதி மற்றும் பவானி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை…

கோவை: மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவுகளை கணக்கெடுக்க இல்லம் தேடி வரும் பணிகள் நடத்தப்படுகிறது கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் சமூக மறுவாழ்வு பணியாளர்கள் (Community Rehabilitaion Worker...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...