கோவையில் வாழை, கறிவேப்பிலையில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வாழை மற்றும் கறிவேப்பிலையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வாழை மற்றும் கறிவேப்பிலையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி 03.06.2026 மற்றும் 04.06.2026 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.இதில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

வாழைப் பொடி, வாழை ஐஸ் கிரீம் மிக்ஸ், வாழைப் பழ ஜாம், கறிவேப்பிலை பொடி, வாழைப்பூ ஊறுகாய்,கறிவேப்பிலை பேஸ்ட், வாழைத் தண்டு மிட்டாய், கறிவேப்பிலை சாத பொடி, வாழை சத்து மாவு ஆகியவை தயாரிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

ஆர்வமுள்ளவர்கள் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள இணைப்பு https://tnau.ac.in/site/aecri-cbe/department-of-pht-about-department மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மற்றும் ரூ.1,770/- (ரூ.1500/- + GST 18%) பயிற்சி முதல் நாளன்று ரொக்கமாக அல்ல, G Pay மூலம் செலுத்த வேண்டும்.

Advertisement

பயிற்சி நடைபெறும் இடம்: அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,
வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் 641 003.
Timing: 9am to 5pm

பேருந்து நிறுத்தம் வாயில் எண். 7. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்-641003.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயபுத்தூர் 641003.
அலைபேசி எண் – 94885 18268,
தொலைபேசி 674 0422-6611340.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.