கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் சம்பத்குமார் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தவெக அரசு பொறுப்பேற்றது முதல் நாள்தோறும் அமைச்சர்கள் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதியில் எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் இன்று நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் அனைவரும் பணியில் இருக்கிறார்களா? பதிவேடுகள் அனைத்தையும் ஆய்வு செய்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் இரவு நேரத்தில் செயல்படும் சிகிச்சை பிரிவுகள் , வெளி நோயாளிகள் பிரிவு, குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். நள்ளிரவு நேரத்தில் அதிகாரிகள் யாருமின்றி, அவர் மட்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

கடந்த வியாழக்கிழமை அன்று அமைச்சர் சம்பத்குமார் கோவை அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் மருத்துவமனை முதல்வர் மருத்துவர்களுடன் ஆய்வு மேற்கொண்ட பொழுது பல்வேறு குறைபாடுகள் குற்றச்சாட்டுகள் சுட்டிக்காட்டப்பட்ட போது நான் சர்ப்ரைஸ் விசிட் மேற்கொண்டு ஆய்வுகள் மேற்கொள்வேன் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

அண்ணாமலைக்கு தோல்வி உறுதி- அமைச்சர் அருண்ராஜ் கோவையில் பேட்டி…

கோவை: அண்ணாமலைக்கு தோல்வி நிச்சயம் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்மக்கள் தீர்ப்பினை மதிக்காமல், பாடம் கற்றுக் கொள்ளாமல்...

Latest News Coimbatore

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.