வேட்பாளரான பிறகு கோவை வந்தார் எஸ்.பி.வேலுமணி…

கோவை: வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கோவை வந்த எஸ்.பி.வேலுமணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

சென்னையில் இருந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு அதிமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். வேட்பாளர்கள் அறிவிக்கபட்ட நிலையில், கோவை வந்த வேலுமணிக்கு, அதிமுக வேட்பாளர்களும் வரவேற்பு அளித்தனர்.

இதற்கு பின்பு முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கோவை மாவட்டத்தில் முழுமையாக வேட்பாளர் அறிவிக்கபட்டுள்ளது என்றார்


கோவை மாவட்டத்தை பொறுத்தவரை எப்பொழுதுமே அதிமுக கோட்டை எனவும் தெரிவித்தார்.

Advertisement

மிகப்பெரிய வளர்ச்சியை , எடப்பாடியார் முதல்வராக இருக்கும் பொழுது கொடுத்திருக்கிறோம்.அத்திக்கடவு அவனாசி திட்டம் , விமான நிலைய விரிவாக்கம், மேம்பாலம் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது என்றார். கடந்த ஐந்தாண்டுகளாக இங்கே எந்த திட்டமும் வரவில்லை எனவும், ஆகவே அதிமுக ஆட்சி எடப்பாடி தலைமையில் வருவது உறுதி எனவும் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 210 தொகுதிகளை பெறுவோம் எனவும் திமுக ஆட்சியில்
ஐந்து ஆண்டுகளாக எந்த திட்டங்களும் நடைபெறவில்லை என தெரிவித்த அவர், அதிமுக ஆட்சி வந்த உடன் மீண்டும் வளர்ச்சி கொண்டு வரப்படும் எனவும்
மக்கள் எதிர்பார்த்த திட்டங்களை கொண்டு வருவோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

அதிமுக பெரிய கட்சி , சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கலாம் அவை காலப்போக்கில் சரியாகிவிடும் என தெரிவித்த அவர், எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
எங்களது வேட்பாளர்கள் அறிவித்து விட்டனர் , ஆனால் இன்னும் திமுக வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என தெரிவித்த அவர், அவர்கள் அறிவித்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பேட்மின்டனில் வெற்றிக்கொடி நாட்டி சீனா செல்லும் கோவை வெங்கீஸ் பயிற்சி மைய மாணவி!

சேலத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி அனு ஸ்ரீ, கோவை வெங்கீஸ் பேட்மின்டன் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, சீனாவில் நடைபெறும் ஏசியன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவுக்காக பதக்கம் வெல்வதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...