50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொள்வேன்- செந்தில் பாலாஜிக்கு எதிராக களம் காணும் அம்மன் அர்ஜுனன் பேட்டி…

கோவை: செந்தில்பாலாஜி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று அதிமுக வேட்பாளர் அண்ணன் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி களம் காண்கிறார். தே.ஜ கூட்டணி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் களம் காண்கிறார்.

இது குறித்து அம்மன் அர்ஜுணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில் இந்த போட்டி திமுக அதிமுகவிற்கு தான் என்றும், வெற்றி பெறுவது அதிமுக தான். 2026 மே மாதம் 5ம் தேதி எடப்பாடியார் முதல்வராக பொறுப்பேற்பார் என்றார்.

செந்தில் பாலாஜி கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, செந்தில் பாலாஜி எங்கள் வேட்பாளர் விஜயபாஸ்கரை கண்டு பயந்து வந்து விட்டார் என்றும் அவர் சொந்த தொகுதியை விட்டு வருவதற்கு காரணம் என்ன? என கேள்வி எழுப்பிய அவர் அதற்குக் காரணம் பயம் தான் எங்கள் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் என்று அறிவிக்கப்பட்டதும் செந்தில் பாலாஜிக்கு ஜுரம் காய்ச்சல் வந்துவிட்டது என்றார்.

Advertisement

இந்தத் தொகுதி சின்ன தொகுதி மக்கள் ஏமாளிகள் என்று நினைத்து விட்டார்கள் போல, டப்பா பாக்ஸ் போன்று ஏதாவது கொடுத்து விடலாம் என்று நினைத்து விட்டார்கள் ஆனால் கொங்கு மக்களுக்கு வரவேற்கவும் தெரியும் அடித்து விரட்டவும் தெரியும் என தெரிவித்தார்.

நிச்சயமாக 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனவும் இங்கு அவருக்கு இடமில்லை இடமில்லை என தெரிவித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் உலக நாயகன் போட்டியிட்டார் அவரால் வெல்ல முடிந்ததா? இல்லைதானே. இங்குள்ள மக்கள் யோசித்து அவர்களுக்கான மக்கள் பணியை செய்யக்கூடியவர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள், ஓட்டு வாங்கி விட்டு சென்னைக்கு சென்று அமருபவர்களுக்கெல்லாம் வாக்களிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

Advertisement

2016 ஆம் ஆண்டு இதே தெற்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். தற்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணி பலமும் உள்ளது அதேபோன்று இந்த முறையும் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் முடியும் தருவாயில் 24மணி நேர குடிநீர் திட்டம்- பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்…

கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளதாகவும் கூடுதல் பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...