கோவை மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்… அமைச்சர் சம்பத் குமார் அழைப்பு!

கோவை: கோவையில் போலியோ சொட்டு மருந்து முகாமைத் தொடங்கி வைத்த அமைச்சர் சம்பத் குமார், மாவட்டத்தில் 1,615 மையங்களில் இம்முகாம் நடைபெறுவதாகவும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு 3.01 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2.97 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சென்னையில் இம்முகாமை முதலவர் விஜய் தொடங்கி வைத்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் இம்முகாமைத் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

sambathkumar tvk minister

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1,124 மையங்களிலும், நகர்ப்புறங்களில் 491 மையங்களிலும் என மொத்தம் 1,615 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. மேலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் 32 இடங்களிலும், 222 நடமாடும் குழுக்கள் மூலமும் இம்முகாம் நடத்தப்படுகிறது.

Also Read: கோவையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பறிமுதல்…

Advertisement

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இம்முகாமில், பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து பயன்பெற வேண்டும்” என்றார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

அதிமுகவை நடத்த எஸ்.பி.வேலுமணியே தகுதியானவர்- புகழேந்தி தெரிவிப்பு…

கோவை: அதிமுகவை நடத்த எஸ் பி வேலுமணி தகுதியானவர் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் ஹோட்டலில் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் முதல்வர் தளபதி முன்னிலையில் தமிழக வெற்றி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...