கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி 08.07.2026 மற்றும் 09.07.2026 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்பட உள்ளது.
இதில் மசாலா பொடிகள் (சாம்பார் பொடி, ரசப்பொடி, கறிமசால் பொடி, பருப்பு பொடி, சிக்கன் 65 மசாலா பொடி), தயார்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், கத்தரிக்காய் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் ஆகிய பயிற்சிகள் அளிக்கபட உள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1,500 + GST 18%) பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும். (ரொக்கம் இல்லை, GPAY மட்டும்).
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
பேராசிரியர் மற்றும் தலைவர்,
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,
வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003.
தொலைபேசி எண் – 94885 18268, 0422 6611340 ஆகும்.


