கோவையில் டேட்டிங் ஆப்; நாதக ஆர்ப்பாட்டம்!

கோவை: டேட்டிங் செயலியை உள்ளிட்டவற்றை தடை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

டேட்டிங் செயலியை தடை செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

Advertisement

டேட்டிங் செயலியால் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் இளம் சமுதாயம் சீரழிவதாக பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் அச்செயலிக்கான கண்டனங்கள் வலுத்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் திரண்டு டேட்டிங் செயலி உள்ளிட்டவற்றை உடனடியாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இது போன்ற செயலால் பெண்கள் பலரும் பாதிக்கப்படுவதாகவும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பலரது வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் மத்திய அரசும் மாநில அரசும் உடனடியாக இதில் நடவடிக்கை எடுத்து சட்டரீதிக்கு உட்பட்டு இவற்றை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் இந்த செயலியின் உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயன்படுத்துபவர்களை விட அதனை செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

எனவே மத்திய மாநில அரசுகள் இரண்டுமே தங்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து அந்த டேட்டிங் செயலி உள்ளிட்டவற்றை தடை செய்ய வேண்டும், அதன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

Recent News

கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவம் சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் உயிரிழப்பு…

கோவை: கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவத்தில் சுட்டு பிடிக்கப்பட்ட மூவரில் ஒருவர் உயிரிழந்தார். கோவையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்த நிலையில்...

Video

Join WhatsApp