கோவை போலீஸ் எச்சரிக்கை… இங்கு வாகனம் நிறுத்தினால் ஆபத்து!

கோவை அரசு மருத்துவமனை முன் சாலையோரங்களில் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்கள் ஆம்புலன்ஸ் இயக்கம், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

கோவை அரசு மருத்துவமனை அருகே சாலையோரங்களில் விதிமீறி நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தினமும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதையடுத்து, “இது வாகனம் நிறுத்தும் இடமில்லை… உங்கள் வாகனத்தை நிறுத்தி இழக்காதீர்கள்” என்ற எச்சரிக்கை பலகையை கோவை மாநகர காவல்துறை நிறுவி, சாலையோர பார்க்கிங்கை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்த சாலையை ஒட்டியே மூன்று பள்ளிகள் செயல்பட்டு வருவதால், தினமும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இந்த வழியாகச் செல்கின்றனர். சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை அதிகரிப்பதுடன், விபத்து அபாயத்தையும் ஏற்படுத்துகின்றன.

Advertisement

மேலும், அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்கள் தடையின்றி செல்ல முடியாத நிலை உருவாகுவதுடன், அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் பாதுகாப்பாக இறங்கி ஏறுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு செல்லும் பொதுமக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

பொதுமக்களின் பாதுகாப்பும், நோயாளிகளின் உயிரும் கருதி, வாகனங்களை உரிய பார்க்கிங் இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்பதே காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்.

Advertisement

“ஒரு தவறான பார்க்கிங்… பலரின் பயணத்தையும், ஒரு உயிரின் வாய்ப்பையும் தடுக்கலாம். சிறிய ஒழுங்கு, பல உயிர்களை பாதுகாக்கும்.”

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

அரசு கலைக்கல்லூரியில் PG Admission; சிறப்பு பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு

கோவை அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினரின் கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது; 557 இடங்களுக்கு 5,046 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.