கோவையில் தமிழர் உடை அணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வெளிநாட்டு மாணவர்கள்

கோவை: கோவையில் வெளிநாட்டு மாணவிகள் சேலை அணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

Advertisement

கோவை மாவட்டம் அரசூர் பகுதியில் செயல்பட்டு வரும் கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், கல்லூரி வளாகத்தில் வண்ணக் கோலமிடப்பட்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு கடவுளை வழிபட்டனர்.

தொடர்ந்து, கல்லூரியில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலை அணிந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனர். மைதானத்தின் நடுவே வைக்கப்பட்ட பொங்கல் பானையைச் சுற்றி நின்று, கும்மியடி பெண்ணே கும்மியடி என்ற பாடலுக்கு கும்மி நடனம் ஆடினர்.

இதில் கல்லூரியில் பயிலும் சிரியா நாட்டைச் சேர்ந்த மாணவிகளும் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து அவர்களும் பொங்கல் விழாவில் பங்கேற்று கும்மி நடனடத்தில் பங்கேற்றனர்.

Advertisement

வெளிநாட்டு மாணவிகள் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் கொடூரம்; நண்பனை சுத்தியால் அடித்து கொ** செய்து வீடியோ வெளீயிட்ட பகீர்…!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே வீட்டுக்குள் புகுந்து 22 வயது இளைஞரை அரிவாள் மற்றும் சுத்தியலால் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...