கோவை ஜிடி மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமரா- விதியை மீறினால் உடனடி அபராதம்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜிடி மேம்பாலத்தில் ரூபாய் 3 கோடியில் ஏ.ஐ தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தும் பணி இன்று முதல் தொடங்குவதாக விக்கப்பட்டுள்ளது.

கோவை – அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் ரூபாய் 3 கோடியில் ஏ.ஐ தொழில்நுட்ப கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது.

கோவை – அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்ட ஜி.டி மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. ரூபாய் 1,671 கோடியில் இந்த பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் முதல் நீண்ட மேம்பாலம் என்ற பெருமை இந்த பாலம் பெற்று உள்ளது.

இந்த மேம்பாலத்தில் விபத்துக்களை தடுப்பதற்காக வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதனை கண்காணிக்க கேமரா அமைக்கப்படவில்லை இதனால் வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் சில வாகனங்களில் சாகசத்தில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதனை தடுக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் பிரிவு சார்பில் ரூபாய் 3 கோடியில் ஏ ஐ தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கேமரா அமைக்கும் பணியானது இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. மேம்பால சந்திப்பு பகுதிக்கான கோல்டுவின்ஸ், உப்பிலிபாளையம் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட உள்ளது.

இது தவிர அண்ணா சிலை, நவஇந்தியா, பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி, ஹோப் காலேஜ், கொடிசியா , விமான நிலையம் சந்திப்பு உள்ளிட்ட எட்டு இடங்களில் உள்ள ஏறும் மற்றும் இறங்கு தளங்கள் அபாய வளைவுகள் உள்ளிட்ட பகுதிகளில் என மொத்தம் 44 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

கண்காணிப்பு கேமரா உயரமான கம்பிகளின் மீது பொருத்தப்படும் இதில் வாகனங்களின் பதிவு எண், உள்ளே அமர்ந்து இருப்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து இருக்கிறார்களா ? இல்லையா ? அதிவேகத்தில் வாகனங்கள் செல்கிறதா ? கூடுதல் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கிறதா ? அதிக எடையில் வாகனங்களில் லோடு ஏற்றப்பட்டு இருக்கிறதா ? போன்ற அனைத்து விதமான போக்குவரத்து விதிகளையும் கண்டறிய முடியும்.

வாகனங்கள் அதிக வேகத்தில் சென்றால் உடனடியாக அந்த வாகனங்களின் வேகம், கேமரா டிஸ்ப்ளே பகுதியில் வாகன ஓட்டிகள் காணும் வகையில் தெரிவிக்கப்படும். மேலும் உடனடியாக அபராதம் விதிக்கப்படும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்து காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவுகள் இணைக்கப்பட்டு எந்த வாகனமும் போக்குவரத்து விதிமுற மீறலில் இருந்து தப்பிக்க முடியாது. மேம்பாலத்தில் அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டும் செல்ல வேண்டும், இதனை மீறி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

கேமரா பொருத்தும் பணி சில நாட்களில் நிறைவடையும், தமிழகத்தில் வேறு எந்த மேம்பாலங்களிலும் இதுபோன்ற ஏ ஐ தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படவில்லை, கோவையில் முதல் முறையாக அமைக்கப்பட்ட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

2 COMMENTS

  1. Triples in bike is not mentioned… unnecessary emergency signals not mentioned…. sound polluting vehicles not added…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் திறக்கப்பட்டது நான் முதல்வன் செயல்பாட்டு மையம்…

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் செயல்பாட்டு மையம் திறக்கப்பட்டது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் பாரதியார் பல்கலைக்கழக செயல்பாட்டு மையத்தினை காணொலி...

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.