திமுக கூட்டணி கலகலத்து விட்டது- கோவையில் நயினார் நாகேந்திரன் பேச்சு…

கோவை: தி.மு.க கூட்டணி கலகலத்து விட்டது என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை, வடவள்ளி கல்வீரம்ப்ளையம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மோடி முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு நலத் திட்டங்களை வழங்கினார்.‌


முகாமில் மத்திய அரசின் நலத் திட்ட வாரியம் 70 வயது அதற்கு மேற்பட்டோருக்கு ஆண்டிற்கு 5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு , செல்வ மகள் சேமிப்பு திட்டம் , கண் மருத்துவ முகாம் உள்ளிட்டவை இடம் பெற்றதை பார்வையிட்டு 200 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார்.

தொடர்ந்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில் காலச்சக்கரம் என்பது சுழன்று வரும் பொது கிரகங்கள் செய்யும், திசையின் கிரகங்கள் எல்லாம் மோடியின் பக்கம் திரும்பி உள்ளது. அமித்ஷா தேசிய கூட்டணியை உறுதி படுத்தினர்.

தி.மு.க வின் கூட்டணி கலகலத்து போய் உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்கிறார்கள். எங்கள் கட்சிக்கு எதுவும் தேவையில்லை, எங்களுக்கு தமிழகத்தில் இருந்து தி.மு.க வை விரட்டினால் மட்டும் போதும். இன்று வானதி ஶ்ரீனிவாசன் அவர்கள் ஏற்பாட்டில் மோடி அரசின் பல்வோறு நலத் திட்டஙக்ளை வழங்கி உள்ளார்.

மத்திய அரசின் மாநில மாவட்டம் முழுவதும், பெண்கள் தங்கும் விடுதிகள் திறக்கப்பட்டது வருகிறது. பிறருக்காக உழைக்கும் இயக்கம் இரு இயக்கம் பொண்களுக்காக உழைக்கும் தலைவர் மோடியும், எம்.ஜி.ஆர்‌ அவர்களும் . தமிழுக்கான தமிழ் மக்களுக்காக உழைப்பவர் மோடி அவர்கள் மலேசியாவகற்கு சென்ற நிலையிலும் தமிழை பற்றி தமிழ் மக்களை பற்றி பெருமையை பேசி உள்ளார் என பேசினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் நாளை துவங்குகிறது உணவு திருவிழா- அனுமதி இலவசம்…

கோவை: கோவையில் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை உணவு திருவிழா நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் தலைமையின் கீழ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில்...

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.